GTA 6 ரசிகர்களுக்காக அசத்தலான அப்டேட்!
வீடியோ கேம் பிரியர்களில் Grand Theft Auto எனும் GTAவை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம்...கடந்த 12 வருடங்களுக்கு முன்பாக வெளியான GTA5, கேமிங் உலகத்தில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது...gta6 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்... அவர்களை குஷிப்படுத்தும் வகையில், ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது... ஏனெனில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் GTA6ன் டிரைலர் வெளியான போதே, ரசிகர்கள் ஃப்ரேம் பை ஃப்ரேம் அதை ஆராய்ந்தனர்...இந்நிலையில், ராக்ஸ்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டேக்-டூ, GTA 6 செப்டம்பரில் வெளியிடப்படும் என அறிவித்தது...PC ப்ளேயர்சுக்காக 2026ல் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது...சரி...இந்தியாவில் இதன் விலை எவ்வளவாக இருக்கும்?...ஸ்டாண்டர்ட் எடிஷன் விலை 5 ஆயிரத்து 999 ரூபாயும், பிரீமியம் எடிஷனின் விலை 7 ஆயிரத்து 299 ரூபாயாகவும் இருக்கும்...ஏன் 8 ஆயிரத்து 800 ரூபாயாக கூட இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது...எப்படிப் பார்த்தாலும் GTA6 இதுவரை வந்த கேம்களிலேயே அதிக விலையுடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை...
