ஆசிய போட்டி- தங்கம் வென்ற இந்தியா - '1983' பட பாடலுக்கு நடனமாடி உற்சாகம்

ஆசிய போட்டி- தங்கம் வென்ற இந்தியா - '1983' பட பாடலுக்கு நடனமாடி உற்சாகம்
Published on

ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆடவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்ட நிலையில், ரேங்க் அடிப்படையில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது. பதக்கம் வென்ற உற்சாகத்தில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் 1983 படத்தில் இடம்பெற்ற "லெஹ்ரா தோ" பாடலுக்கு நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com