தளபதியாக மாறிய கம்பீர்.. அவரை இப்படி பார்ப்பதுதான் ரொம்ப கஷ்டம்..கொல்கத்தாவின் எமோஷனல் மொமண்ட்ஸ்!

ஐ.பி.எல். கோப்பையை கொல்கத்தா வென்ற பிறகு மைதானத்தில் அரங்கேறிய சுவாரஸ்ய சம்பவங்கள் என்னென்ன?

ஹைதராபாத்தை வீழ்த்தி கோப்பையை கையில் ஏந்திய கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் செலபிரேஷன் கவனம் பெற்றது. கடந்த கால்பந்து உலகக்கோப்பையை வென்றபோது மெஸ்ஸி என்ன செய்தாரோ அதனை அப்படியே ரீ-கிரியேட் செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர்...

மறுபுறம் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மைதானத்தை வலம் வந்து பிளையிங் கிஸ்களை பறக்கவிட்டபடி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். கம்பீரை ஆரத்தழுவி முத்தமிட்டும் மகிழ்ந்த ஷாருக்கான், ஒட்டுமொத்த அணியையும் பிளையிங் கிஸ் செலபிரேஷன் மோடிற்கும் (celebration mode) கொண்டு சென்றார்.

கொல்கத்தா அணியில் ஆலோசகர் கம்பீரையும் ஆல்ரவுண்டர் சுனில் நரைனையும் முறைத்தபடி பார்ப்பது சுலபம். ஆனால் சிரித்தபடி பார்ப்பது அரிதினும் அரிது. அத்தி பூத்தாற்போல் மைதானத்தில் இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். மட்டுமின்றி ஒருவரையொருவர் தூக்கி வெற்றிக் கொண்டாட்டத்திலும் திளைத்தனர். மற்ற வீரர்களோ கம்பீரை தோளில் தூக்கிவைத்து கொண்டாடித் தீர்த்தனர்.

கொல்கத்தா ஆல்ரவுண்டர் ரிங்கு சிங் ஐபிஎல் கோப்பையை உணர்வுப்பூர்வமாக ஆரத்தழுவிய புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரசிகர்கள், கோப்பையை வழங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டதை கிண்டலடித்து வருகின்றனர்... ஆம்.... கொல்கத்தாவின் சேஸிங்கே சுமார் 1 மணி நேரத்தில் முடிந்தது. ஆனால் செலபிரேஷன் செர்மனி 1 மணி நேர காத்திருப்புக்குப் பின்தான் தொடங்கியது.

இதனிடையே கோப்பையை வென்ற கொல்கத்தா அணியையும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரையும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள்...

கொண்டாட்டத்தின் அம்பாசடராக (ambassador) திகழும் கெயில், வெறும் வாழ்த்துமடலோடு நிறுத்திவிடவில்லை. ஒருபடி மேலே சென்று கொல்கத்தாவின் வெற்றியை தனது வெற்றிபோல் ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com