100 மீட்டர் தூரத்தை ஜமைக்காவை சேர்ந்த நட்சத்திர வீரர் 9.58 விநாடிகளில் கடந்ததே உலக சாதனையாக உள்ள நிலையில் , அதனை கம்பாளா வீரர் ஸ்ரீனிவாசா கவுடா 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்த வீரரை மத்திய விளையாட்டு அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர் திங்களன்று இந்திய விளையாட்டு ஆணையம் வந்தடைவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு போட்டிகளில் கலந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.