

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் : நாளை நடைபெறும் இறுதிப் போட்டி... மகளிர் பிரிவில் மகுடம் சூடப்போவது யார்?
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தாஸியா வெற்றி பெற்று உள்ளார். பாரிஸ் நகரில் நடந்த அரையிறுதிப் போட்டியில், ஸ்லோவேனிய வீராங்கனை தமாராவை 7-க்கு 5, 6-க்கு 3 என்ற செட் கணக்கில் அனஸ்தாஸியா வீழ்த்தினார். இதன்மூலம், முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதிப் போட்டிக்குள் அவர் நுழைந்தார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், செக் குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவாவை, அனஸ்தாஸியா எதிர்கொள்கிறார்.