பிரெஞ்சு ஓபன் - ஜோகோவிச்சை வீழ்த்தி ஃபைனலுக்குள் கால்பதித்த சின்னர்

x

பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் முன்னணி வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நம்பர் ஒன் வீரர் யானிக் சின்னர் கால்பதித்தார். பரபரப்பாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச்சை, 6க்கு 4, 7க்கு 5, 7க்கு 6 என்ற செட் கணக்கில் சின்னர் வீழ்த்தினார். இதன்மூலம் பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்குள் முதல்முறையாக சின்னர் நுழைந்த நிலையில் ஜோகோவிச்சின் 25வது கிராண்ட்ஸ்லாம் கனவு மீண்டும் தகர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்