பிரெஞ்சு ஓபன் - மகுடம் சூடிய கோகோ காஃப்
பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவைச் சேர்ந்த இளம் வீராங்கனை கோகோ காஃப் coco gauff சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பாரிஸ் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவும் aryna Sabalenka 2ம் நிலையில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்பும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் செட்டை டை-பிரேக்கரில் tie breaker 7க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் சபலென்கா கைப்பற்றினார்
அடுத்த செட்டில் comeback கொடுத்த கோகோ காஃப், அதிரடியாக விளையாடி 6க்கு 2 என்ற கணக்கில் 2வது செட்டை வென்றார்
இருவரும் தலா ஒரு செட்டை வென்றதால் ஆட்டம் சூடுபிடித்த நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் கோகோ காஃப் கைப்பற்றி சபலென்காவை சாய்த்தார
இதன்மூலம், முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 21 வயதே நிரம்பிய கோகோ காஃப் முத்தமிட்டார்.