கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து மஞ்சரேக்கர் நீக்கம்

பி.சி.சி.ஐ. வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து மஞ்சரேக்கர் நீக்கம்
Published on
பி.சி.சி.ஐ. வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிரிக்கெட் வர்ணனையில் மஞ்சரேக்கர் ஈடுபட்டு வந்திருந்தார். இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா,சக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோரை மோசமாக விமர்சித்து மஞ்சரேக்கர் சர்ச்சையில் சிக்கினார். மேலும் ஐ.பி.எல். போட்டியின் போது மும்பை அணிக்கு ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக வர்ணனை செய்து கிரிக்கெட் ரசிகர்களிடையே வெறுப்பை அவர் பெற்றார். இந்நிலையில், வர்ணனையாளர்கள் குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டதை கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com