இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் - ஸ்வியாடெக், ரைபகினா முன்னேற்றம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில், முன்னாள் சாம்பியன்களான இகா ஸ்வியாடெக் Iga Swiatek மற்றும் எலேனா ரைபகினா Elena Rybakina தங்களின் முதல் போட்டிகளை வெற்றியுடன் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் கெய்லா டேவை Kayla Day எதிர்கொண்ட போலந்தின் ஸ்வியாடெக் 6-0, 7-6 (2) என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் எலேனா ரைபகினா Elena Rybakina, ஹெய்லி பாப்டிஸ்டை Hailey Baptiste-7-6(5), 2-6, 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
