

இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் செற்றி, தனது 100வது சர்வதேச போட்டியில் இன்று களம் காணுகிறார். மும்பையில் நடைபெறும் INTERCONTINENTAL கால்பந்து தொடரில் இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில் கென்யாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். முதல் போட்டியில் சீன தைபே அணியை 5க்கு0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய உத்வேகத்துடன் இந்திய அணி இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இந்திய கால்பந்து அணிக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு கேப்டன் சுனில் செற்றி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.