திருச்செங்கோடு : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
திருச்செங்கோடு : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
Published on

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. காடச்சநல்லூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 48 அணிகள் விளையாடின. இறுதிப்போட்டியில் 2 க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில், நாமக்கல் மாவட்டம் மோகனூர் அணி வெற்றி பெற்றது. திருப்பூர் மாவட்ட அணி இரண்டாவது இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com