முதல் ஒருநாள் போட்டி - இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

x
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தல் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அறிமுகமான முதல் போட்டியிலேயே ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளும், அவருக்கு பக்கபலமாக ஜடேஜாவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்
  • 249 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்பு களமிறங்கிய சுப்மன் கில் 87 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இறுதியாக 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 251 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்