FIDE Grand Swiss 2025 | Vaishali | கிராண்ட் ஸ்விஸ் செஸ் - 2வது முறை வைஷாலி சாம்பியன்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு நடத்திய மகளிர் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். வைஷாலி இறுதி சுற்றில் சீனாவின் டான் ஜோங்ஜியை எதிர்கொண்ட நிலையில், 11வது சுற்று முடிவில் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது முறை இந்த சாம்பியன் பட்டத்தை அவர் தட்டிச்சென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் கேண்டிடேட்ஸ் தொடருக்கு வைஷாலி தகுதி பெற்றுள்ளார். உலக சாம்பியனுடன் போட்டியிடுவது யார் என்பது கேண்டிடேட்ஸ் தொடரில் தீர்மானிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக் மற்றும் கொனேரு ஹம்பி ஆகியோர் கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
