UNDER-19 கிரிக்கெட்டில் அதிவேக சதம் - வைபவ் சூரியவன்ஷி சாதனை

x

19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய UNDER 19 அணி, வொர்செஸ்டர் Worcester நகரில் நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயதான வைபவ் சூரியவன்ஷி அதிரடி ஆட்டத்தால் 52 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

மொத்தம் 78 பந்துகளில் 10 சிக்சர்கள், 13 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் சேர்த்து கலக்கினார் வைபவ்...

ஐபிஎல் தொடரில் மிக இளம் வயதில் சதமடித்தவர் என்ற சாதனையை படைத்த வைபவ் சூரியவன்ஷி, தற்போது 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதமடித்த வீரர் என்ற மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்