தோனி காலில் விழந்த கிரிக்கெட் ரசிகர் - காவலாளிகளை ஏமாற்றி மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் வீரர் தோனி பயிற்சியில் ஈடுபட்ட போது, ரசிகர் ஒருவர் அவரது காலில் விழுந்தார்.
தோனி காலில் விழந்த கிரிக்கெட் ரசிகர் - காவலாளிகளை ஏமாற்றி மைதானத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு
Published on
வரும் 29ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீரர்கள் பயிற்சி செய்வதை காண ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி வழங்கப்படுகிறது.இந்நிலையில் வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது , ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் புகுந்து தோனியின் காலில் விழுந்து கும்பிட்டார். உடனடியாக அங்குவந்த காவலர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com