இங்கிலாந்து அணியை அலறவிட்ட ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே.. டி20 தொடரை வென்ற இந்தியா | ENG vs IND

x

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பில் சால்ட்(PHIL SALT), பென் டக்கட்(BEN DUCKETT) அதிரடியாக ரன் சேர்த்தாலும், பவர்பிளேவிற்கு பிறகு சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபக்கம் அதிரடியாக விளையாடிய ஹாரி ப்ரூக்(HARRY BROOK) அரைசதம் அடித்து அசத்தினார். எனினும், இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசியதால் இங்கிலாந்து அணி 166 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 15 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. சொந்த மண்னில் தொடர்ந்து 17வது தொடரை இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்