

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில், தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 107 ரன்களுக்கு சுருண்டது.
இந்தநிலையில், நேற்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் விளாசியது. போதிய வெளிச்சம் இன்மையால் நேற்றைய ஆட்டம் 81 ஓவர்களில் முடித்துக் கொள்ளப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.