வலுவான நிலையில் இங்கிலாந்து - என்ன செய்ய போகிறது கில் படை?
வலுவான நிலையில் இங்கிலாந்து - என்ன செய்ய போகிறது கில் படை?
இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 250 ரன்களைக் கடந்துள்ளது.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணியில் சாக் கிராளி Zak Crawley - பென் டக்கெட் Ben Duckett இணை முதல் விக்கெட்டுக்கு 43 ரன்கள் எடுத்தது. கிராளியும் டக்கெட்டும் நிதிஷ் குமார் ரெட்டி வீசிய ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து லேசாக தடுமாறியது.
3வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் joe root - ஓலி போப் olie pope இணை நிலைத்து நின்று ஆட, இங்கிலாந்தின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்தது. ஜோ ரூட் அரைசதம் கடந்த நிலையில் 44 ரன்களில் ஓலி போப், ஜடேஜாவிடம் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக்கை 11 ரன்களில் பும்ரா கிளீன் போல்டாக்கினார்.
5வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணை சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. சதத்தின் விளிம்பில் உள்ள ஜோ ரூட் 99 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
