4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி : சச்சின் சாதனையை முறியடித்த ஸ்மித்

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடந்து வரும் 4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் விளாசிய ஸ்மித், சச்சின் படைத்த சாதனை ஒன்றை முறியடித்தார்.
4வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி : சச்சின் சாதனையை முறியடித்த ஸ்மித்
Published on
இரண்டாம் நாளில் அற்புதமாக ஆடி சதம் விளாசிய ஸ்மித் குறைந்த இன்னிங்சில் அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 சதங்களை பதிவு செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஸ்மித் 121இன்னிங்சில் படைத்த இந்த சாதனையை , இதற்கு முன்னர் சச்சின் 136 இன்னிங்சில் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளர் செய்த நிலையில், அதில் ஸ்மித் மட்டும் 211 ரன்கள் விளாசியுள்ளார். முதலாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com