நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில், எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் வரும் யானைகளை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ரகு, பொம்மி ஆகிய இந்த யானைகளை வனத்துறையினர் மாயாற்றில் குளிக்க வைத்தனர். அப்போது, விரைவாக குளித்துவிட்ட பொம்மி யானை, தும்பிக்கையால் தண்ணீரை எடுத்து, பீய்ச்சி விளையாடியது. இதனை, சுற்றுலா பயணிகள் தூரத்தில் இருந்து கண்டுகளித்தனர்.