DSP On Duty.. இங்கிலாந்தை சம்பவம் செய்த சிராஜ்.. இந்தியா முன்னிலை

x

பர்மிங்காம் டெஸ்ட் போட்டியில் இந்தியா 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்த நிலையில் இங்கிலாந்து தங்கள் முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து வீரர்கள் ஜேமி ஸ்மித் மற்றும் ஹாரி ப்ரூக்,, சதம் விளாசினர். இந்திய பவுலர் சிராஜ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 28 ரன்களுடனும் கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 4ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்