நடுரோட்டில் டிராவிட் செய்த செயல்.. தீயாய் பரவும் வீடியோ - உண்மையில் என்ன தான் ஆச்சு?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், பெங்களூருவில் நடு ரோட்டில் ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முன்னால் சென்ற ஆட்டோ திடீரென பிரேக் அடித்ததால், ராகுல் டிராவிட்டின் கார் ஆட்டோ மீது மோதி சேதமடைந்ததாகவும், அதனால் அவர் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே சாலையில் ராகுல் டிராவிட் கோபப்படுவது போல ஒரு வீடியோ வெளியாகி வைரல் ஆன நிலையில், இறுதியில் அது விளம்பரப்படம் என தெரியவந்தது. எனவே தற்போது பரவும் வீடியோ விளம்பர படமா அல்லது உண்மையிலேயே நடந்த சம்பவமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Next Story