எங்களப் போட்டு அடிக்காதப்பா" - ஜெய்ஸ்வாலிடம் லாரா அரட்டை
"எங்கள் பவுலர்களை இந்த அளவு துவம்சம் செய்ய வேண்டாம்" என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் லாரா, இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலிடம் ஜாலியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை பதம் பார்த்த ஜெய்ஸ்வால், 175 ரன்கள் விளாசினார்..
2ம் நாள் ஆட்ட முடிவில் லாரா மற்றும் ஜெய்ஸ்வால் சந்தித்துக்கொண்டனர். அப்போது, தங்கள் பவுலர்களை இவ்வளவு மோசமாக அடிக்க வேண்டாம் என ஜெய்ஸ்வாலிடம் லாரா ஜாலியாக கோரிக்கை வைக்க, தான் அப்படி எல்லாம் அடிக்கவில்லை என ஜெய்ஸ்வால் சிரித்தபடி பதில் அளித்தார்.
Next Story
