101வது சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார் ஜோகோவிச்
கிரீஸ் நாட்டில் நடைபெற்ற ஹெலனிக் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று அசத்தினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச்சும் இத்தாலியின் லாரன்சோ முசெட்டியும் களம் இறங்கினர். இதில் முதல் செட்டில் 4க்கு 6 என்ற கணக்கில் பின் தங்கிய ஜோகோவிச், அடுத்த 2 செட்களில் 6க்கு 3, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வென்று அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ஜோகோவிச் பெற்றுள்ள 101வது பட்டத்தை பெற்றுள்ளார்.
Next Story
