தினேஷ் கார்த்திக்கை விமர்சிக்கும் ரசிகர்கள் : வாய்ப்பு கிடைத்தும் ரன் ஓடவில்லை என புகார்

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றும் தினேஷ் கார்த்திக்கை ரசிகர்கள் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தினேஷ் கார்த்திக்கை விமர்சிக்கும் ரசிகர்கள் : வாய்ப்பு கிடைத்தும் ரன் ஓடவில்லை என புகார்
Published on

நேற்றைய ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றி கடினமாக இருந்த போது, கார்த்திக், குர்னல் பாண்டியா ஜோடி இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றது. இந்நிலையில், கடைசி ஓவரில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு

கிடைத்த போது, அதனை தினேஷ் கார்த்திக் எடுக்கவில்லை. இதனால் தான் இந்தியா தோற்றுவிட்டதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். எனினும் எதிரே இருக்கும் பேட்ஸ்மேன் கார்த்திக் அளவிற்கு விளையாடக் கூடியவர் அல்ல என்பதால், கார்த்திக் செய்தது தான் சரி என்று கிரிக்கெட் விமர்சகர்கள் ஆதரவு அளித்துள்ளனர். கடைசி ஓவரில் நடுவர் WIDE அளிக்காமல் தவறு செய்ததே இந்தியாவின் வெற்றி பறிபோய்விட்டதாகஅவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com