100ஆவது டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுகிறார் கருணரத்னே

x

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக இலங்கை அணியின் முன்னணி தொடக்க வீரர் திமுத் கருணரத்னே (Dimuth Karunaratne) அறிவித்துள்ளார். இலங்கை அணிக்காக 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 ஆயிரத்து 172 ரன்களையும், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஆயிரத்து 316 ரன்களையும் கருணரத்னே அடித்துள்ளார். வருகிற 6ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கல்லேவில் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை ஆடவுள்ள நிலையில், இந்தப் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக கருணரத்னே கூறியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 100வது போட்டியாக அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்