தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயார் - பிசிசிஐ அதிகாரி தகவல்

ஐபிஎல் தொடருக்கு பிறகு தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த பிசிசிஐ தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயார் - பிசிசிஐ அதிகாரி தகவல்
Published on
கடந்த 15ம் தேதி அன்று தோனி திடீரென சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனையடுத்து அவருக்கு பிரியாவிடை போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது குறித்து பிசிசிஐ-ன் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் தாங்கள் எப்போதும் தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயாராக இருந்ததாகவும் ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓய்வை அறிவித்து விட்டு தான் ஒரு வித்தியாசமான வீரர் என்பதை தோனி வெளிப்படுத்தி இருப்பதாக கூறினார். தற்போது ஐபிஎல் தொடர் நடக்க விருப்பதால் பிரியாவிடைக்கான போட்டிக்கு வாய்ப்பு இல்லை என்றும் ஐபிஎல் முடிந்ததும் தோனியிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com