Dhoni Kohli Relationship | யாருக்கும் தெரியாத கோலியின் மறுபக்கம் - ஓபனாக உடைத்துவிட்ட தோனி
கோலி ரகசியங்களை வெளியிட்ட தோனி
விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்ல, சிறந்த பாடகரும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். களத்திற்கு வெளியே விராட் கோலியின் பண்புகள் குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது. அதில் கிரிக்கெட்டை தாண்டிய குணங்களைப் பற்றி கேட்டபோது, கோலி ஒரு சிறந்த பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என்று தோனி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதன்படி, விராட் கோலி நன்றாகப் பாடுவார். அவர் ஒரு நல்ல பாடகர். அவர் ஒரு நல்ல நடனக் கலைஞர். அதைவிட மிமிக்ரியில் சிறந்தவர் என தோனி தெரிவித்துள்ளார். மேலும், ஜாலியான மனநிலையில் இருந்தால் விராட் கோலி மிகவும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டவர் என்றும் தோனி கூறியுள்ளார்.
Next Story
