ஹெய்டனுடன் கைகோர்த்த தோனி - உலகளவில் ட்ரெண்டான லிஸ்ட்..!
தோனி, க்ரீம் ஸ்மித், ஹெய்டனுக்கு ஹால் ஆஃப் ஃபேம் கவுரவம்
ஹால் ஆஃப் பேம் பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனி உட்பட 7 பேரை சேர்த்து ஐசிசி கவுரவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் க்ரீம் ஸ்மித்தும் GREAME SMITH, முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லாவும் HASIM AMLA சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக பல சாதனைகளை படைத்த மேத்யூ ஹெய்டனையும் mathew hayden ஐசிசி கவுரவித்துள்ளது. நியூசிலாந்து ஜாம்பவான் டேனியல் வெட்டோரிக்கும் daniel vettori ஹால் ஆஃப் ஃபேம் கவுரவம் கிடைத்துள்ளது. பாகிஸ்தான் மகளிர் அணியின் முன்னாள் நட்சத்திரம் சனா மிர் sana mir மற்றும் சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான சாரா டெய்லரையும் sara taylor ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்த்து ஐசிசி பெருமைப்படுத்தியுள்ளது.
Next Story