லாராவின் 400 ரன்கள் ரெக்கார்டை உடைக்க வாய்ப்பிருந்தும் கிரிக்கெட் உலகையே ஏமாற்றிய முல்டர்
மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாராவின் BRAIN LARA வரலாற்று சாதனையை முறியடிக்கும் எளிய வாய்ப்பை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் வியான் முல்டர் Wiaan Mulder தவறவிட்டுள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் வியான் முல்டர், 2ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின்போது ஆட்டமிழக்காமல் 367 ரன்கள் குவித்திருந்தார்.
ஏற்கனவே டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் அதிக ரன் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்திருந்த முல்டர், பிரைன் லாராவின் 400 ரன் என்ற வரலாற்று சாதனையை முறியடித்துவிடுவார் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் எதிர்பார்த்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத சமயத்தில், முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக தானே அறிவித்து ஷாக் கொடுத்துவிட்டார் கேப்டன் முல்டர்....
மூன்று நாட்கள் மற்றும் 2 SESSIONS மீதமிருக்க, முல்டரின் இந்த முடிவு தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கே ஆச்சரியம் கலந்த ஷாக்-ஐ கொடுத்துள்ளது.
இதனால், கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லாரா அடித்த 400 ரன் சாதனை தொடர்கிறது.
முன்னதாக 297 பந்துகளில் முச்சதம் அடித்த முல்டர், அதிவேகமாக முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்தியாவின் விரேந்திர சேவாக் 278 பந்துகளில் முச்சதம் அடித்ததே சாதனையாக உள்ளது.
