டெல்லி டெஸ்ட் - 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் நிதானம்
டெல்லி டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆன் ஆன வெஸ்ட் இண்டீஸ்,, 3ம் நாள் ஆட்ட முடிவில் இந்தியாவை விட 97 ரன்கள் பின்தங்கியுள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ், 248 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய பவுலர்கள் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Next Story
