

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்கள் அடித்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய கோலி நேர்த்தியாக ஆடி 159 பந்துகளை எதிர்கொண்டு, 12 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி தனது 27வது சதத்தை பதிவு செய்தார்.