CSK | Sanju Samson | CSK-க்கு அனுப்புமாறு RR அணியிடம் ஓபனாகவே கேட்ட சஞ்சு? - அப்போ அது உண்மை தானா?
CSK | Sanju Samson | CSK-க்கு அனுப்புமாறு RR அணியிடம் ஓபனாகவே கேட்ட சஞ்சு? - அப்போ அது உண்மை தானா?
சி.எஸ்.கே.வுக்கு தாவும் சஞ்சு? - தீயாய் பரவும் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சன் செல்லப் போகிறார் என செய்தி வெளியான நிலையில், தன்னை டிரேட் டிரான்ஸ்ஃபர் செய்யுமாறு அவரே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அணுகி இருப்பதாக தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தாலும், கடந்த சீசனில் 9 போட்டிகளில் மட்டுமே சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவரது சமூக வலைதள பதிவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், சி.எஸ்.கே.வுக்கு செல்ல இருப்பது போன்ற தகவல்களுக்கு வழிவகுத்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சனை வரவேற்க தயாராக இருப்பதாக பேசப்பட்டது. இந்த சூழலில் தான், சஞ்சு சாம்சன் அடுத்த சீசனிலும் கேப்டனாகவே செயல்படுவார் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளக்கம் அளித்தது. அதேசமயம், தன்னை டிரேடிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் சஞ்சு சாம்சன் கோரிக்கை விடுத்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி, கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளன
