இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் CSK வீரர் ஆயுஷ் மாத்ரே
ஐபிஎல்ல களமிறங்குன முதல் போட்டியில இருந்தே பேட்டிங்ல ஜொலிச்சிட்டு வராரு மும்பையைச் சேர்ந்த 17 வயசான சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.
6 மேட்ச்சுல 206 ரன்கள் அடிச்சிருக்க ஆயுஷ் மாத்ரே எதிர்காலத்துல இந்திய டீம்ல நிச்சயம் தடம் பதிப்பார்னு அவரோட பேட்டிங்கை பார்த்து சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களும், கிரிக்கெட் வர்ணனையாளர்களும் சொல்லிட்டு வராங்க..
இது பிசிசிஐ செலக்ஷன் குழுவுக்கு கேட்ருச்சிபோல, இங்கிலாந்து செல்லும் 19 வயதுக்குட்பட்டோருக்கான 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியோட கேப்டனா ஆயுஷ் மாத்ரேவை நியமிச்சிருக்காங்க.. இதை கேட்டு, சிஎஸ்கேவும் மாத்ரேவை வாழ்த்தி போஸ்டரை ஷேர் பண்ண, அது வைரல்...
இவர் மட்டுமில்ல, 14 வயசு பையனா, ராஜஸ்தான் டீமுக்காக அதிரடி ஆட்டத்தால கலக்கிட்டு வர வைபவ் சூரியவன்ஷிக்கும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.
இவர்களோட தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயசான பிரனவ் ராகவேந்திராவுக்கும் இந்திய under 19 டீமல் இடம் கிடைச்சிருக்கு..
