CSK | CSK Fans | Sanju Samson |சஞ்சு சாம்சன் சொன்ன பதில் - கன்பார்மே செய்த CSK ரசிகர்கள்

x

CSK-வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு சஞ்சு சாம்சன் பதில்

சிஎஸ்கேவில் இணைவது தொடர்பான கேள்விக்கு எல்லாம் கடவுளின் கையில் என சஞ்சு சாம்சன் கூறியது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சக வீரர் சஞ்சு சாம்சனை நேர்காணல் எடுத்துள்ளார்.

அதில், சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன் இணைவது தொடர்பாக இணையத்தில் பரவி வரும் செய்தி தொடர்பாக அஸ்வின் சூசகமாக கேள்வி கேட்க, அதற்கு சிரித்தபடியே எல்லாம் கடவுள் கையில் என சஞ்சு சாம்சன் பதிலளித்தார்.

டிரேட் முறையில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், அதேபோல அஸ்வினும் டிரேட் செய்யப்படலாம் எனவும் இணையத்தில் தகவல் பரவி வரும் நிலையில், சஞ்சு சாம்சனின் இந்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்