CSG vs NRK | என்ன ஒரு காட்டடி.. யாருய்யா இந்த ஸ்வப்னில் சிங்? - மிரண்டுபோன கிரிக்கெட் ரசிகர்கள்
TNPL தொடரில் நெல்லையை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி
கோவையில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர், 213 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற சி.எஸ்.ஜி. அணி, நடப்பு சீசனில் 200 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது.
Next Story