CSK-வின் கொடூர டெஸ்ட் ஆட்டம் | 2nd Half-ல் ரசிகர்கள் அலறி ஓட்டம்

x

முந்தைய போட்டிகள போல இந்த போட்டிலயும் சென்னைக்கு தொடக்கம் சரியா இல்ல... தொடக்க வீரர்கள் கான்வேவும் Conway ரச்சினும் rachin சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழக்க, வழக்கம்போல பவர்பிளேல சென்னை தடுமாறுச்சு...

ஒரு கட்டத்துல நூறு ரன்னயாச்சு கடப்போமானு ரசிகர்கள் தவிக்க, துபே இறுதிவரை நின்னதால 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்துச்சு சென்னை...

120 பந்த சந்திச்சு வெறும் 103 ரன்..... டெஸ்ட் மேட்ச் கூட தேவலாம்னு வெறுப்பான சென்னை ரசிகர்கள் முதல் பாதி ஆட்டத்துலயே மைதானத்த காலி பண்ணாங்க...

அடுத்து 104 ரன்னுன்ற சுலபமான இலக்க நோக்கி ஆடுன கொல்கத்தாக்கு குயின்டன் டிகாக் Quinton de Kock, சுனில் நரைன் Sunil Narine ஜோடி அட்டகாசமான தொடக்கம் தந்தாங்க...

வாண வேடிக்கைய காட்டிட்டு டிகாக்கும் நரைனும் ஆட்டமிழக்க, ரஹானே-ரிங்கு சிங் ஜோடி 11வது ஓவர்லயே கொல்கத்தாவ இலக்க கடக்க வச்சுச்சு..... 8 விக்கெட் வித்தியாசத்துல கொல்கத்தா அபார வெற்றி பெற்றுச்சு...


Next Story

மேலும் செய்திகள்