அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் - இந்தியா இமாலய வெற்றி!
அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம் - இந்தியா இமாலய வெற்றி
- இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. மும்பையில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ABISHEK SHARMA நாலாபுறமும் பந்தை பறக்கவிட்டு 37 பந்துகளில் சதத்தை பதிவு செய்தார்.
- இறுதியாக 54 பந்துகளில் 13 சிக்சர்களுடன் அபிஷேக் 135 ரன்கள் குவிக்க, இந்திய அணி 247 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, மோசமான பேட்டிங்கால் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்களில் சுருண்டது.
- இதனால் 150 ரன்களில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4க்கு ஒன்று என்ற கணக்கில் கோப்பையை தன்வசமாக்கியது.
Next Story
