

ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவிலேலே மீரா பாய் சானு தங்கம் வென்றார். நடப்பு உலக சாம்பியனான அவர், இந்த போட்டியில் தொடர்ந்து 6 முறை காமன்வெல்த் அளவில் புதிய சாதனைகளை படைத்தார். அதிகபட்சமாக அவர் 110 கிலோ எடையை தூக்கி அசத்தினார்
இந்த தொடரின் முதல் நாளில் ஆடவருக்கான பளுதூக்குதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் குருராஜா 249 கிலோ எடையை இருப்பிரிவுகளாக தூக்கி வெள்ளி வென்று அசத்தினார். இந்தப் பிரிவில் மலேசிய வீரர் முகமது தங்கமும், இலங்கை வீரர் லக்மல் வெண்கலமும் வென்றனர்.