சின்சினாட்டி ஓபன்- பாதியில் விலகிய சினெர்; அல்காரஸ் சாம்பியன்

x

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இத்தாலியை சேர்ந்த ஜானிக் சினெரும், இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சினெர் மேற்கொண்டு விளையாடாமல் விலகினார். இதையடுத்து, அல்காரஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்