சின்சினாட்டி ஓபன் - முதன்முறையாக 'இகா ஸ்வியாடெக்' சாம்பியன்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீராங்கனை இகா ஸ்வியாடெக், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றில், பொலந்து வீராங்கனை, இகா ஸ்வியாடெக்கும், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியும் மோதினர். விறுவிறுப்பாக நடந்த போட்டியில், ஜாஸ்மின் பவுலினியை 7-5,6-4 என்ற செட் கணக்கில் இகா ஸ்வியாடெக் வீழ்த்தினார். இதன்மூலம், சின்சினாட்டி ஓபன் பட்டத்தை முதல்முறையாக இகா ஸ்வியாடெக் கைப்பற்றி அசத்தினார்.
Next Story
