செஸ் உலகக் கோப்பை: 3வது சுற்றிலேயே குகேஷ் அதிர்ச்சி தோல்வி..
கோவாவில் நடைபெற்று வரும் செஸ் உலகக்கோப்பை தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த உலக சாம்பியனும் கிராண்ட் மாஸ்டருமான குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். 3ம் சுற்றுப் போட்டியில் ஜெர்மனி வீரர் ஃப்ரெட்ரிக் ஸ்வேன் (Frederik Svane) உடன் குகேஷ் மோதினார். இதில் முதல் ஆட்டத்தை டிரா செய்த குகேஷ், 2வது ஆட்டத்தில் தோல்வியைத் தழுவினார். இதனால் 3ம் சுற்றில் ஜெர்மனி வீரர் வெற்றி பெற்றார். மேலும், போதிய புள்ளிகளைப் பெறாததால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்தும் குகேஷ் வெளியேறினார்.
Next Story
