செஸ் - குகேஷ் VS பிரக்ஞானந்தா - சமனில் முடிந்த போட்டி
நெதர்லாந்தில் நடைபெற்றுவரும் டாடா ஸ்டீஸ் செஸ் தொடரில் தமிழக கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ் - பிரக்ஞானந்தா இடையில் நடைபெற்ற போட்டி சமனில் முடிந்தது. 8வது சுற்றில் உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தாவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தாவும் கருப்பு நிற காய்களுடன் குகேஷும் விளையாடிய நிலையில், 33வது நகர்த்தலில் இருவரும் டிரா செய்ய ஒத்துக்கொண்டனர். 8 சுற்றுகளின் முடிவில் குகேஷும் பிரக்ஞானந்தாவும் தலா 5 புள்ளி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
Next Story

