செஸ் : கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி குகேஷ் அபாரம்

x

6 வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் குகேஷும், வெள்ளை நிற காய்களுடன் கார்ல்சனும் விளையாடினர். கார்ல்சனுக்கு குகேஷ் கடுமையாக நெருக்கடி அளிக்க தோல்வியை உணர்ந்த கார்ல்சன், 49வது நகர்த்தலில் போட்டியில் இருந்து விலகினார். குகேஷ் போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார். சமீபத்தில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் கார்ல்சனை குகேஷ் தோற்கடித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு குகேஷ் வலிமையான பிளேயர் player அல்ல என கார்ல்சன் கூறி இருந்தார். அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குகேஷின் இந்த வெற்றி அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்