"தல தோனி பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல" - சிஎஸ்கே புதிய ஜெர்ஸி அறிமுக விழாவில் சரவெடி

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஸ்பான்சராக எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இதனையொட்டி புதிய ஸ்பான்சரையும், ஸ்பான்சரின் பெயரை கொண்ட அணியின் புதிய ஜெர்சியையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், தீபக் சஹார் உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள், எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி அரிக்-தே உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பிரம்மாண்ட திரையில், சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தீபக் சஹார், ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக தோனியிடம் பேசியதாகவும், அப்போது தோனி, அடுத்தாண்டு ஐபிஎல்-லின் போதே நீ என்னை சந்திக்க வேண்டுமென கூறியதாகவும், தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்