கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக, சேப்பாக்கம் மைதானத்தில், 12 ஆயிரம் இருக்கைகளுடன் ஐ, ஜே, கே என கூடுதலாக மூன்று கேலரிகள் அமைக்கப்பட்டது. ஆனால் இந்த கேலரிகளை அமைக்க, அரசிடம் உரிய அனுமதி பெறவில்லை என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி சென்னை மாநகராட்சி சீல் வைத்தது. மேலும், கேலரிகள் இடையேயான இடைவெளி 8 மீட்டராக இருக்கவேண்டும், ஆனால் 5 புள்ளி 4 மீட்டராக, இருந்ததால் அந்த கேலரிகளுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி வழங்கவில்லை. எனவே, இந்நிலையில் கேலரிக்கு இடையேயான, இடைவெளியை சரியான முறையில் அமைத்து, மூன்று கேலரிகளையும், திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.