சாம்பியன்ஸ் டிராபி.. ரச்சின் களமிறங்கியதும் மாறிய ஆட்டம்.. அரையிறுதிக்குள் நியூசிலாந்து

x

சாம்பியன்ஸ் டிராபி.. ரச்சின் களமிறங்கியதும் மாறிய ஆட்டம்.. அரையிறுதிக்குள் நியூசிலாந்து

குரூப் ஏ பிரிவில் ராவல்பிண்டியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷான்டோ shanto 77 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மைக்கேல் பிரேஸ்வெல் michael bracewell 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.பின்னர் 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் வில் யங் will young,,, டக் அவுட் ஆனார். மூத்த வீரர் வில்லியம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே 30 ரன்களில் போல்டாக, 4வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டாம் லாதம் tom latham இணை நிலைத்து நின்று ஆடியது. அதிரடியாக ஆடிய இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசினார். டாம் லாதம் அரைசதம் அடித்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் 47வது ஓவரில் இலக்கை எட்டிய நியூசிலாந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிமூலம் அரையிறுதிக்கும் நியூசிலாந்து முன்னேறியது.


Next Story

மேலும் செய்திகள்