சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

x

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளன. இதையடுத்து பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் ட்ராபி ஐசிசி தொடர் நடைபெற உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணி, சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருவரும், சனிக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்