39 பந்தில் செஞ்சுரி - 41 வயதில் மரண அடி அடித்த `ஏலியன் ABD'
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் World Championship of Legends கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏ.பி டிவில்லியர்ஸ் அடுத்தடுத்து சதம் விளாசி அதகளப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் பவுண்டரி மழை பொழிந்த டிவில்லியர்ஸ், 46 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார். அவரது சூறாவளி இன்னிங்சில் 15 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும்....
ஏற்கனவே இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியிலும் டிவில்லியர்ஸ் சதம் விளாசி அசத்தி இருந்த நிலையில், தற்போது மீண்டும் சதம் அடித்து ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளார். ஓய்வு பெற்ற பிறகும் டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி வருவதை சுட்டிக்காட்டி, முன்கூட்டியே டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றிருக்கக் கூடாது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Next Story
