ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்...களமாடக் காத்திருக்கும் ஜோகோவிச், அல்கராஸ் - மீண்டும் சாதிப்பாரா சபலென்கா?

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்...களமாடக் காத்திருக்கும் ஜோகோவிச், அல்கராஸ் - மீண்டும் சாதிப்பாரா சபலென்கா?
Published on

ஓராண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்போர்ன் நகரில் நாளை ஆரம்பம் ஆகவுள்ளது. ஆடவர் ஒற்றையர், மகளிர் ஒற்றையர், கலப்பு இரட்டையர், ஆடவர் மற்றும் மகளிர் இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், யானிக் சின்னர், சிட்ஸிபாஸ், ஆன்டி முர்ரே உள்ளிட்ட முன்னணி வீரர்களும், மகளிர் பிரிவில் இஹா ஸ்வியாடெக், சபலென்கா, சக்காரி, வோஸ்னியாக்கி உள்ளிட்ட வீராங்கனைகளும் களமாடக் காத்துள்ளனர். முதல் சுற்றுப் போட்டிகள் இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், சுமார் 2 வார காலத்துக்கு இந்த தொடர் டென்னிஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com